
75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி மதுரை மாநகர் மகளிர் அணி சார்பாக அதன் மாவட்ட தலைவி ஓம்சக்தி. தனலட்சுமி தலைமையில் பெத்தானியாபுரம், அண்ணா மெயின் வீதி பகுதிகளில் வீடு,வீடாக சென்று தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சியை பாஜக மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது பாரத அன்னை,பிரதமர் நரேந்திர மோடி போன்று வேடமிட்டு வந்தது மக்கள் வரவேற்பை பெற்றது. இதில் பொருளாதார பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா, மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எஸ்.டி மனோகரன், பொதுச் செயலாளர் வினோத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.